Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
January 23 Release : தமிழ் மற்றும் பிற மொழிககளில் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இதோ

பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பராசக்தி , தலைவர் தம்பி தலைமையில் , வா வாத்தியார் ஆகிய மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. அடுத்தபடியாக ஜனவரி 23 ஆம் தேதி குடியரசு தினத்திற்கு முன்பாக பல்வேறு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
மங்காத்தா ரீரிலீஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அஜித்திந் 50 ஆவது படமாக வெளியான மங்காத்தா அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் புதிய டிரெய்லர் ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது. மங்காத்தா படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி படத்திற்கு பெரியளவில் மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
திரெளபதி 2
2020 ஆம் ஆண்டு வெளியான திரெளபதி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரெளபதி 2 வரும் ஜனவரி 23 வெளியாகிறது. மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேலா ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், ஒய் ஜீ மகேந்திரன், பரணி, தேவியானி ஷர்மா, திவி, சரவணன் சுப்பையா, ஜெயவேல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஹாட்ஸ்பாட் டூ மச்
கடந்த 2024 ஆம் ஆண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் ஹாட்ஸ்பாட் . இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ஹாட்ஸ்பாட் டூ மச் . பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஷ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா, சஞ்சனா திவாரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மாயபிம்பம்
செல்ஃப்ஸ்டார்ட் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே ஜே சுரேந்த்ர தயாரித்து எழுதி இயக்கியுள்ள படம் மாயபிம்பம். ஜானகி , ஆகாஷ் , ஹரி ருத்ரன் , ராஜேஷ் , அருண்குமார் , மணிமேகலை ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வரும் மாயபிம்பம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது
பேபி கேர்ள்
அண்மையில் நிவின் பாலி நடித்து வெளியான சர்வம் மாயா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் பேபி கேர்ள். லிஜோமோல், சங்கீத் பிரதாப் & அபிமன்யு திலகன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அருண் வர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.






















