மேலும் அறிய

ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?

Modakurichi Constituency: 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாத காலத்திற்குள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது எப்போதுமே இந்தியா முழுவதையும் திரும்பி பார்க்க வைக்கும் அரசியல் களம் ஆகும். தமிழகத்தில் இதுவரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களும் அப்படியே நடந்துள்ளது. 

மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தல்: 

அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்த, தேர்தல் ஆணையத்தையே நடுநடுங்க வைத்த ஒரு தேர்தலை கீழே காணலாம். 

1996ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்த இந்தியா முழுவதும் பேசுபொருளானது மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்த முன்வைத்து வந்த நிலையில், அப்போதைய அரசு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. 

1033 வேட்பாளர்கள்:

இதன் காரணமாக, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாகவும், நாடு முழுவதும் கவனம் ஈர்க்கும் விதமாகவும் அந்த தேர்தலில் விவசாயிகளே களம் இறங்க முடிவு செய்தனர். அப்படி, 1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த அந்த தேர்தலில் விவசாயிகளும் தேர்தல் களத்தில் இறங்க, மொத்தம் 1033 வேட்பாளர்கள் மொடக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டனர். இது மொத்த நாட்டையுமே  திரும்பி பார்க்க வைத்தது. இதில் 1005 வேட்பாளர்கள் ஆண்கள், 28 வேட்பாளர்கள் பெண்கள்.

இதனால், தேர்தல் ஆணையம் திக்குமுக்காடிப்போனது. இதையடுத்து, இந்த மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் சட்டமன்ற தேர்தலை நடத்த சிறப்புக் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்தது. அந்த குழு தேர்தல் தேதியை மே 2ம் தேதியில் இருந்து ஜுன் 1ம் தேதிக்கு மாற்றினர். 

வெற்றி பெற்றது யார்?

வழக்கமாக, ஒரு தொகுதியில் குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 30 வேட்பாளர்கள் வரை போட்டியிடுவார்கள். 1996ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறைப்படுத்தப்படாத காலம் என்பதால், மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் யார்? யார்? அவர்களின் சின்னங்கள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதற்காக தனியாக வாக்குப்பதிவு புத்தகமே அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். அந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64 ஆயிரத்து 436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் 88 வேட்பாளர்கள் ஒரு ஓட்டுகூட பெறவில்லை. 158 வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். 

புரட்சிக்கு வித்திட்ட தேர்தல்:

இந்த தேர்தல் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்திய தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கு பின்பு பல்வேறு கிடுக்குப்பிடிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. அதாவது, சட்டமன்ற தேர்தலில் வேட்பாளருக்கான டெபாசிட் தொகையாக ரூபாய் 250ல் இருந்து ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தியது. ஆதிதிராவிட பழங்குடியின வேட்பாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தினர். 

மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகையாக ரூபாய் 500ல் இருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆதிதிராவிட, பழங்குடியின வேட்பாளர்களுக்கு ரூபாய் 12,500 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க இந்த தேர்தல், நாட்டின் தேர்தல் விதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வித்திட்டது.  

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget