Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
Chennai Power Cut(21-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 21-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நங்கநல்லூர்
பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்பிஐ காலனி 3-வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர், மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், நேரு காலனி, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலியம்மன் தெரு, இந்து காலனி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்.
மஞ்சம்பாக்கம்
கம்பன் நகர், தேவி நகர், மெஜஸ்டிக் அவென்யூ, ராமச்சந்திரா நகர், பெருமாள் கோவில் தெரு, மந்தவெளி 1 முதல் 6-வது தெரு, பெருமாள் கோவில் தோட்டம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, வடக்கு மற்றும் தெற்கு டெலிபோன் காலனி, ஏவிஎம் நகர் மற்றும் விரிவாக்கம், மேட்டுமா நகர், பிரசாந்த் நகர், வசந்தம் அவென்யூ, ஜே.ஜே. நகர், கிருஷ்ணா நகர், ஈஸ்வரி நகர், எம்சிஆர் நகர், திருமுருகன் நகர், கத்திவேலன் தெரு, தெலுங்கு காலனி மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.




















