Madurai: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
கோவில்பட்டி சிறையில் தாக்கப்படவில்லை என மறுத்தார். இதை தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் இருவரும் கோவில்பட்டி சிறையில் தாக்கப்பட்டதை சாட்சியம் அளித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மறைக்கிறார் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் வாதம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு...குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து சாட்சிய விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஆரம்பகாலகட்டத்தில் விசாரணை செய்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது சாட்சியம் அளித்த நீதிபதி பாரதிதாசனிடம் குற்றம்சாட்டப்பட்ட தரப்பான சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது நடத்திய வாதத்தில் உயிரிழந்த வணிகர்களான தந்தை - மகன் இருவரும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதால் உயிரிழக்கவில்லை எனவும், கோவில்பட்டி சிறையில் வைத்து சிறை காவலர்கள் உள்ளிட்டோர் தாக்கியதால் தான் உயிரிழந்தனர். இது குறித்து அப்போது சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இதை மறைக்கிறார் என கூறி வாதிட்டு குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சாட்சியம் அளித்த நீதிபதி பாரதிதாசன் குற்றம்சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாட்சியம் அளிக்கையில் தந்தை மகன் இருவரும், காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி சிறையில் தாக்கப்படவில்லை என மறுத்தார். இதை தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

