Sasikala: அதிமுகவில் இணைவது நிச்சயம்; ஆட்சியை பிடிப்பது உறுதி: ஆரூடம் சொல்லும் சசிகலா!
”மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும்” வி.கே.சசிகலா தி.மு.கவிற்கு அட்வைஸ்
ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே.சசிக்கலா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வீர பேரரசி வேலுநாச்சியாரின் வாரிசுதாரர்களான ராணி மதுராந்தகி நாச்சியார் வி.கே.சசிக்கலாவிற்கு வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் சிவகங்கை பையூர் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீர பேரரசி வேலுநாச்சியார் நினைவிடம் வந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் வீரத்தாய் குயிலியின் நினைவு தூனிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அ.தி.மு.க.வில் இணைவது உறுதி. மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். அடுத்த ஆட்சி எங்களுடைய ஆட்சி தான். அது மக்களுடைய ஆட்சியாக இருக்கும் - சசிகலா சிவகங்கையில் பேட்டி.@TTVDhinakaran | @SSluwing | @AmmavinVazhi | @OfficeOfOPS | @EPSTamilNadu | #sivagangai pic.twitter.com/c2pmlobFTk
— Arunchinna (@iamarunchinna) May 17, 2022