சபரிமலைக்கு தேனி வழியாக போறீங்களா?..கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க!
தேனி வழியாக செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளிய மலை, கட்டப்பனை, குட்டிக்கணம், முண்டகாயம், எருமேலி மற்றும் பம்பை வழியாக சபரிமலையை அடைய முடியும்.
சபரிமலையில் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை யாத்திரை தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் நிறைவாக டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், அங்கு நாள்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் வரலாறு காணாத வகையில் நேற்று (டிச.20) மட்டும் 96,007 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினமும் 70,964 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.
தேனி டூ சபரிமலை செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம்
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று மலைச்சாலை வழிகள் உள்ளது. போடி நாயக்கனூரில் இருந்து போடி மெட்டு வழியாகவும், கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு மலை வழியாகவும் குமுளி மலை வழி சாலை வழியாகவும் கேரளாவை அடைய முடியும்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு அதிகப்படியான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாவே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்டம் கூடலூர் ,குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் சென்று வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; 5 வழக்குகள் பதிவு
சபரிமலை செல்லும் பக்தர்கள் எந்தவித இடையூறும் போக்குவரத்து நெரிசல் இன்றி சபரிமலைக்கு சென்று வர தேனி மாவட்ட காவல் துறையின் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் கம்பம்மெட்டு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படும். இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் நேற்று முதல் கம்பம்மெட்டு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் தேனி, சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளிய மலை, கட்டப்பனை, குட்டிக்கணம், முண்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். ஐயப்பன் கோவிலில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கணம், பீர்மேடு, வண்டிப்பெரியார், குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக திரும்பி வரவும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக முக்கியமான சாலை சந்திப்புகளில் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்கள் பணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.