மேலும் அறிய
Advertisement
எஸ்.ஜி.சூர்யா வழக்கு: சென்னை சைபர் க்ரைம் போலீசில் தினமும் கையெழுத்து இட அனுமதி
நிபந்தனை ஜாமினில் உள்ள சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள் தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக. நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவுக்கு மதுரை ஜெ.எம்., நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஜாமினில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பாஜக மாநிலச் செயலாளராக இருப்பவர் S.G.சூர்யா. இவர், மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பியான சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் கடந்த 16-ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சூர்யாவிற்கு ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீஸார் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரை கிரைம் போலீஸில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் தனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாம தாய் , 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும் எனவே, சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்து சூர்யாவின் ஜாமீன் தளர்வு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், எனது ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்து உள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு , எனது ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட அனுமதி வழங்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,அரசு தரப்பில் , நிபந்தனையை மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், குடும்ப சூழ்நிலை காரணமாக நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிடவேண்டும் என வாதிட்டார். இதை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிபந்தனை ஜாமினில் உள்ள S.G.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள் தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion