கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் - வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 53.87 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. தற்போது வைகை அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, மதுரை பகுதிகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவிற்காக நேற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் முதல் மே 5ந்தேதி வரை மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
Factory Bill 12 Hours: 12 மணிநேர வேலை மசோதா வாபஸ்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
இந்த விழாவிற்காக 5 நாட்களுக்கு முன்பாகவே வைகை அணையில் இருந்து அதாவது நேற்று காலை 11.00 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பகல் நேரத்தில் நேற்று காலை திறக்கப்படது.
தண்ணீர் பகல் வேளையிலேயே வைகை ஆற்றில் வழியாக சென்று இன்று காலை மதுரையை சென்றடைந்துள்ளது. இதனால் நேற்று காலையிலேயே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது முதல் இரண்டு நாட்கள் வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் மொத்தம் 5 நாட்களில் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நேற்று தண்ணீர் திறக்கப்பட்டு நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் தலைமையிலான அதிகாரிகள் மதகுகளை இயக்கி பார்த்தும், அணையில் உள்ள அபாய சங்கை ஒலிக்க செய்தும் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்