அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் - விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்..!
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்யப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
Manju Warrier : மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு.. காரணம் இதுதான்..
இந்த நிலையில் அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமானது மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு வணிகவரித்துறை அமைச்சர் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்,
உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு.!!! விரைவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளது!
— Nagaraj (@CenalTamil) July 7, 2022
மேலும் இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் தரப்பில் இந்த ஒப்பந்த புள்ளியானது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆண்டுகளில் தொடங்க வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்