Manju Warrier : மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு.. காரணம் இதுதான்..
சரியான நேரத்தில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளை செலுத்தியதிற்காக மத்திய வருமான வரித்துறையிடம் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளனர் நடிகை மஞ்சு வாரியர் , நடிகர் மோகன்லால்.
சரியான நேரத்தில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளை செலுத்தியதிற்காக மத்திய வருமான வரித்துறையிடம் பாராட்டுச் சான்றிதழை நடிகை மஞ்சு வாரியர் , நடிகர் மோகன்லால் பெற்றுள்ளனர் .
மலையாள சினிமாவின் முக்கிய நடிகையாக தனது கம்-பேக்க்குப் பிறகு இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் ஹவ் வோல்ட் ஆர் யூ படத்தின் மூலம் தனது கம்பேக் மூலம் தனது சினிமா ராஜ்ஜியத்தினை யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் நிறுவியவர். அண்மையில் தமிழில் அசுரன் திரைப்பட்டத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவருக்கு சமீபத்தில் மத்திய வருமான வரித்துறை ஜி.எஸ்.டி மற்றும் செலுத்த வேண்டிய வரிக் கணக்குகளை சரியாக செலுத்தியுள்ளதாக பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் சரியான நேரத்தில், செலுத்த வேண்டிய தங்களது வரிகளை சரியாக செலுத்துபவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்குவது வழக்கம். அவ்வகையில் பிரபலங்களும் அவ்வப்போது இச்சான்றிதழ்களைப் பெறுவதும் வழக்கம். இந்த முறை மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சரியான நேரத்தில் உரிய வரியினை செலுத்தியுள்ளனர். தங்களது கடமையினைச் சரியாக செய்துள்ள இவர்களைப் பாராட்டி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ், செயல்படும் மத்திய வருமான வரித்துறை சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
The Central Board of Indirect Taxes & Customs, Ministry of Finance, Government of India have issued a Certificate of Appreciation for timely filing and remittance of GST dues.
— Mohanlal (@Mohanlal) July 2, 2022
I thank the Government of India for their appreciation. Proud to be an Indian. Jai Hind! pic.twitter.com/xWhduJJBV0
மோகன்லால் & சச்சினுக்கும் பாராட்டு
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதாழை புகைப்படமெடுத்து தனது அதிகாரப் பூர்வ ச்மூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டர் பதிவோடு, ”நான் சரியான நேரத்தில் வரி கட்டியதற்காக தனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. என்னுடைய கடமைச் செய்ததிற்குப் பாராட்டியுள்ள நிதி அமைச்சகத்திற்கு நன்றி. இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” இவ்வாறு அந்த பதிவில் நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கும், சரியான நேரத்தில் வரி செலுத்தியதிற்காக மத்திய நிதி அமைச்சகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்