மேலும் அறிய
pugar petti: பஸ் வசதி இல்லை; எட்டாக் கனியாக மாறும் பெண் கல்வி, சிவகங்கை மாவட்டத்தின் அவல நிலை
பஸ் ஸ்டாப்புக்கு செல்லவே 2 கிலோ மீட்டர் ஆகும். இதனால் பள்ளிப் படிப்பின் விகிதமே எங்கள் கிராமத்தில் குறைந்துவிட்டது. வேதனையை வெளிப்படுத்தும் கிராமம்.

கிராம மாணவர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி ஒன்றியம் மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதி மக்கள் வறட்சியை சமாளித்து மானாவாரிப் பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் ஏராளமான கிராமங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக பிடாரினேந்தல் மற்றும் நல்லுக் கிராமம் எனும் கிராமங்களுக்கு சுகந்திரம் கிடைத்ததற்கு பின்னர் கூட பேருந்து வசதி எட்டாக் கனியாக இருந்துவருதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
#pugarpetti பேருந்து வசதி இல்லாததால் பெண்கள் கல்வி எட்டா கனியா உள்ளது !
— arunchinna (@arunreporter92) December 28, 2022
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தை சேர்ந்த பிடாரனேந்தல் மற்றும் நல்லுக்கிராமம மக்கள் இணைப்பு சாலையும், பேருந்து வசதியும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.#sivagangai @SRajaJourno @ramaniprabadevi pic.twitter.com/XK1PWObtYa
நல்லுக் கிராம மக்கள் சிலர் நம்மிடம்....," பாவப்பட்ட கிராமமாக எங்கள் பகுதி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் திருமணம் செஞ்சு கொடுக்க கூட யோசிக்கிராங்க. அந்த அளவிற்கு போக்குவரத்து வசதி சிரமமா இருக்கு. பஸ் ஏறிப்போகக் கூட பக்கத்து கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். அங்கிருந்து பள்ளிக் கூடம் மேலநெட்டூருக்கு 6 கிலோ மீட்டர், இளையான்குடிக்கு போகனும்னா 8 கிலோ மீட்டர் இப்படி எங்க ஊருக்கு எல்லாமே தூரம் தான். ஆனாலும் எங்களுக்கு சரியான பஸ்வசதி கிடைக்கல.

பஸ் வசதி இல்லாததால பள்ளிக் கூடம் போறதே கடுசு. இதுல எங்குட்டு பிள்ள குட்டிங்க காலேஜ் போகுங்க. பஸ் வசதி இல்லாததால பெண் பிள்ளைகள் படிப்பு அதிகளவு பாதிக்கப்பட்டுருச்சு. ஒட்டுமொத்தாம படிக்கும் விகிதமும் குறைஞ்சு போச்சு. எம்.பி., எம்.எல்.ஏ., என எல்லார் கிட்டையும் மனு கொடுத்தாச்சு. ஆனாலும் பஸ் கிடைச்ச பாடில்லை" என்று நொந்து கொள்கின்றனர் கிராம மக்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















