இலங்கை மக்களுக்காக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை கொடுத்த 7 வயது சிறுவன்.. குவியும் பாராட்டு..
சிறுவயதிலேயே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்காக அளிக்க முன்வந்த 7 வயது சிறுவனின் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
#madurai | இலங்கை மக்களுக்காக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை கொடுத்த மதுரை மேல அனுப்பானாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவரின் 7 வயது மகன் சுதர்சனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். @UpdatesMadurai @gayathri_asokan | @thangadurai887 | @vetridhaasan | #abpnadu pic.twitter.com/GrMq7hrLSI
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார்.