பல்சர் பைக் வாங்குவதற்காக 45 சவரன் நகையை திருடிய மதுரை புள்ளிங்கோ...! - 48 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீஸ்
45 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் 48 மணி நேரத்தில் நகைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்த விமலநாதன் அதே பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு விமலநாதன் கடந்த 12 ஆம் தேதி வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
#Abpnadu மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். விமலநாதன் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார். @singer_shaan pic.twitter.com/CQfbevrNRY
— Arunchinna (@iamarunchinna) March 12, 2022