watch video | பால் குடம் சுமந்த பக்தர்களின் பாதங்களை குளிர்வித்த இஸ்லாமியர்கள் - மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ
’’பள்ளிவாசல் வழியாக வந்த போது, அங்குள்ள ஜமாத்தார்கள் பால்குடம் ஏந்தி வருபவர்களுக்கு வெயில் தெரியாமல் இருப்பதற்காக, வழி நெடுகிலும் தண்ணீர் பாய்ச்சி குளிர்ச்சி அடைய செய்தனர்’’
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் காரைக்குடியில் நடந்த சம்பவம் அனைத்து சமுதாய மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த மீனாட்சிபுரத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
#Abpnadu | மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடந்த சம்பவம் அனைத்து சமுதாய மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.#sivagangai | #karaikudi | #madurai | #spritual | @LPRABHAKARANPR3 | @kathiravan_vk | @SSluwing | @SuVe4Madurai . . ... pic.twitter.com/MhzfzrGJrM
— Arunchinna (@iamarunchinna) March 14, 2022
இக்காட்சியை கண்டவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தனர். மிகப்பெரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளது நமது தமிழ்நாட்டில் ஜாதி மதம், பேதங்கள் இல்லை என்ற உண்மையை ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பலரும் தங்களது இணையத்தில் சேர் செய்து வருகின்றனர்.#Abpnadu | சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேத்திக்கடன் செலுத்த பக்தர்கள் நடந்து செல்லும் போது, இஸ்லாமியர்கள் அவர்களின் கால் சுடாமல் இருக்க தண்ணீர் ஊற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.@gurusamymathi pic.twitter.com/oOWpXNIVnO
— Arunchinna (@iamarunchinna) March 14, 2022