மேலும் அறிய

’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  நச்சுப்பாம்பை  பார்த்த முனிவர் அந்த பாம்புக்கு மருத்துவம் அளித்து காப்பாற்றினாராம்.

தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ - ஜியோ இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் சபிக்கப்பட்ட சமூகம் என்றால் அது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்தான் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான துரோகங்களை திமுக அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்கள் சார்பில் முன்வைக்கப்படும் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருபவைதான். இன்னும் கேட்டால் எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை திமுகவே வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற திமுக அரசு மறுத்து வருகிறது.

ஒற்றை வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றிய அரசு

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

முனிவர் - விஷப்பாம்பு கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  நச்சுப்பாம்பை  பார்த்த முனிவர் அந்த பாம்புக்கு மருத்துவம் அளித்து காப்பாற்றினாராம். ஆனால், அந்த பாம்போ, கொஞ்சமும் நன்றி இல்லாமல் அந்த முனிவரையே கொத்தியதாம். அதேபோல்தான் பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த  திமுகவை அரசு ஊழியர்கள்தான் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள்.  ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல்  அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது.

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாடு 16% பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக ஒருபுறம் மார்தட்டிக் கொள்ளும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம்  நிதி நெருக்கடி என்ற பழைய பல்லவியை மீண்டும், மீண்டும் பாடி  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? இதற்கு பெயர்தானே இரட்டை வேடம்?

அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு

அரசு ஊழியர்கள்தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு ஆவர்.  அரசின் நிர்வாக சுமைகளை சுமக்கும் அவர்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் திமுகவை  வீட்டுக்கும் அனுப்பும் மக்கள் படையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன் நின்று வழி நடத்துவார்கள். திமுக அரசு அகற்றப்படுவதை உறுதி செய்வார்கள்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Online Automated Patta Transfer : இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Embed widget