மேலும் அறிய

முதன் முறையாக மதுரை டூ பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம்

முதன் முறையாக மதுரையிலிருந்து பெங்களுருக்கு நேரடி வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.

மதுரை - பெங்களுரு ரயில் புறப்பட்ட போது பூக்கள் தூவி மேளதாளங்கள் முழங்க அனுப்பிவைப்பு.

தமிழகத்தில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட தொடங்கிய நிலையில் மதுரை ரயில்வே சந்திப்பு வழியாக நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களுரு ஆகிய 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. முதன் முறையாக மதுரையிலிருந்து பெங்களுருக்கு நேரடி வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது. மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் ‘வந்தே பாரத்’ தொடக்க விழா மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் வி. சோமன்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர்மோடி காணொலி மூலம் சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் மற்றும் மீரட் - லக்னோ இடையேயான  3 வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கிவைத்த நிலையில், மதுரையிலிருந்து பெங்களுரு செல்லும் வந்தே பாரத் ரயிலை ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கொடியசைத்த நிலையில், ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது  ரயில் புறப்பட்டபோது பூக்கள் தூவி மேளதாளங்கள் முழங்க அனுப்பிவைத்தனர்.

- முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின்! ஆனால் நிபந்தனை! - நீதிபதி கறார்

மதுரை எம்.பி மதுரையில் விழா மேடையில் பேசுகையில்

”மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் வேண்டுமென்று தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். மூன்று வந்தே பாரத் ரயில்கள் மதுரை ரயில் நிலையத்தை தொட்டுச் செல்கின்றது. மதுரை - பெங்களூரு இடையே மிக மிக அவசியமான ஒரு வழித்தடம் நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர், இணை அமைச்சரிடம் அரசியலாக அதிகம் சண்டையிடுவோம். மதுரையின் உரிமை என்றால் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். மதுரையில் 2-வது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும். ரயில்வேக்கு தேவையான எல்லா நிலமும் ரயில்வே துறையிடம் இருக்கின்றது. தென்மாவட்டங்களில் மதுரையில் தான் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து நெருக்கடியை சந்திக்கிறது. புதிய ரயில்களை இயக்குவதில் மிகவும் கடினமாக உள்ளது. மதுரை சோழவந்தான், செக்கானூரணி வழியாக சிவரக்கோட்டை இணைக்கும் விதமாக நான்கு வழிச்சாலையை ஏற்படுத்தினால் மதுரை ரயில் நிலையம் எளிதாக வர முடியும்” என்றார்.

ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேசியபோது 

“தென்னிந்தியாவின் நுழைவாயிலாக உள்ள தமிழ்நாடு பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது. கடந்த 2009- 2014 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வெறும் ரூ.75 கோடி மட்டுமே ரயில்வேக்கு நிதி ஒதுக்கியது. பாஜக அரசு தமிழகத்திற்கு 6350 கோடி ரூபாய் ரயில்வே - க்கு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 2150 கி.மீ வரை ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 62 ரயில் நிலையங்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை - பெங்களூரு ரயில் பொதுமக்களுக்கும் ஐ.டி ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்” என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Paris Paralympics 2024:பாரீஸ் பாராலிம்பிக்..பதக்க வேட்டையை தொடருமா இந்தியா! இன்றைய போட்டி அட்டவணை

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vande Bharat Fare: தென் மாவட்டங்களுக்கு 2 வந்தே பாரத் ரயில் சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget