மேலும் அறிய
Advertisement
முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின்! ஆனால் நிபந்தனை! - நீதிபதி கறார்
முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நான்கு வார காலத்திற்கு காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் 25,000 ரூபாய் வைப்பு தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கிய நீதிபதி.
முன் ஜாமின் கோரிய பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல், அதில், "நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
முகாந்திரம் இல்லை
இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. நேற்று இந்த மனு மீதான
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் இவருடைய பணிக்காலத்தில் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, அதற்கான முகாந்திரமும் இல்லை எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
சாட்சியங்களை கலைக்க நேரிடும்
சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன். மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முன்ஜாமின் வழங்கினால் வழக்கின் சாட்சியங்களை கலைக்க நேரிடும் எனவே முன்ஜாமின் வணங்கக் கூடாது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீது பதியபட்டுள்ள வழக்கு ஜாமினில் விடுவிக்கக் கூடிய பிரிவா அல்லது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து விளக்கம் தேவை. எனவே, அது சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் தீர்ப்பை இன்றுக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
வெளியான தீர்ப்பு
இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை பரத வரதட்சக்கரவர்த்தி இன்று வழங்கினார். அப்போது..,சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு - நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு. முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நான்கு வார காலத்திற்கு காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் 25,000 ரூபாய் வைப்பு தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கி நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion