Vande Bharat Fare: தென் மாவட்டங்களுக்கு 2 வந்தே பாரத் ரயில் சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?
Vande Bharat Express Ticket Price: நாகர்கோயில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே இயக்கவுள்ள 2 புதிய வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பயண கட்டண விபரம்.
Vande Bharat Express Fare Details: நாளை துவங்க உள்ள 2 புதிய வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதன் கட்டண விபரம் தெரிந்துகொள்ள முழுமையாக படிக்கவும்.
நாட்டின் பெருமை வந்தே பாரத்
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நாகர்கோயில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே இயக்கவுள்ள 2 புதிய வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- Thangalaan : தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
மதுரை - பெங்களூர் சாதாரண இருக்கைகள் கட்டண விபரம்
மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 440, திருச்சிக்கு ரூபாய் 555, கரூருக்கு ரூபாய் 795, நாமக்கல்லிற்கு ரூபாய் 845, சேலத்திற்கு ரூபாய் 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 1555, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூபாய் 1575 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மதுரை - பெங்களூர் உயர் வகுப்பு இருக்கைகள் கட்டண விபரம்
அதே போல் மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 825, திருச்சிக்கு ரூபாய் 1075, கரூருக்கு ரூபாய் 1480, நாமக்கல்லிற்கு ரூபாய் 1575, சேலத்திற்கு ரூபாய் 1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 2835, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூபாய் 2865 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சென்னை - நாகர்கோவில் சாதாரண இருக்கைகள் கட்டண விபரம்
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூபாய் 380, விழுப்புரத்திற்கு ரூபாய் 545, திருச்சிக்கு ரூபாய் 955, திண்டுக்கல்லுக்கு ரூபாய் 1105, மதுரைக்கு ரூபாய் 1200, கோவில்பட்டிக்கு ரூபாய் 1350, திருநெல்வேலிக்கு ரூபாய் 1665, நாகர்கோவிலுக்கு ரூபாய் 1760 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சென்னை - நாகர்கோவில் உயர் வகுப்பு இருக்கைகள் கட்டண விபரம்
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூபாய் 705, விழுப்புரத்திற்கு ரூபாய் 1055, திருச்சிக்கு ரூபாய் 1790, திண்டுக்கல்லுக்கு ரூபாய் 2110, மதுரைக்கு ரூபாய் 2295, கோவில்பட்டிக்கு ரூபாய் 2620, திருநெல்வேலிக்கு ரூபாய் 3055, நாகர்கோவிலுக்கு ரூபாய் 3240 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Palani: முத்தமிழ் முருகன் மாநாடு கடைசி நாள்; குடும்பத்துடன் கண்காட்சியை கண்டுகளித்த தூய்மை பணியாளர்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NIT Trichy: என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; வருத்தம் தெரிவித்த கல்லூரி நிர்வாகம்!