மேலும் அறிய
Advertisement
பென்னிக்ஸும் ஜெயராஜும் காயங்களுடன் வந்தனர் - மருத்துவமனை பணியாளர் சாட்சியம்
’’இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்’’
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஏபிபி நாடு செய்திகளை தொடர்ந்து பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனை பணியாளர் நடராஜன் என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். அப்போது தந்தை மகன் இருவரும் காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது இருவரின் உடலில் இருந்த காயங்களின் தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும் சாட்சியம் அளித்தார். இதையடுத்து சாட்சியத்திடம் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் தரப்பினர் குறுக்கு சாட்சிய விசாரணை நடத்தினா்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் வழக்கின் மற்றொரு சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தந்தை மகன் இருவருக்கும் ஊசி செலுத்திய செவிலியரிடம் சாட்சிய விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion