மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Keezhadi Excavation | பாசி மணி, பகடைச் சில்லுகள்... அப்டேட் ஆகும் கீழடி அகழாய்வு 8-ம் கட்டம் !
கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுப் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
![Keezhadi Excavation | பாசி மணி, பகடைச் சில்லுகள்... அப்டேட் ஆகும் கீழடி அகழாய்வு 8-ம் கட்டம் ! Phase 8 of the work is underway at the Keezhadi Excavation Site in Sivagangai District Keezhadi Excavation | பாசி மணி, பகடைச் சில்லுகள்... அப்டேட் ஆகும் கீழடி அகழாய்வு 8-ம் கட்டம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/45da3d2d75dca51585f6c47e869dc718_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வட்ட_சில்லுகள்
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைதொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7 ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டது.
![Keezhadi Excavation | பாசி மணி, பகடைச் சில்லுகள்... அப்டேட் ஆகும் கீழடி அகழாய்வு 8-ம் கட்டம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/30666b3274c470d661fae516c1854cd9_original.jpg)
கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்து கீழடியில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கீழடியில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
![Archaeological excavations in Keezhadi have found dice and algae.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/a591ebc35c7b9a81281873ed7f7e74ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
#Abpnadu சமீபத்தில் கீழடியில் பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய குறிப்பாக பெண்கள் விளையாடுவதற்கு அதிகமாக பயன்படுத்தி வட்ட வடிவிலான பெரிதும் சிறிதுமாக அழகிய 2 சில்லுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது.#கீழடி pic.twitter.com/irsmxybSne
— Arunchinna (@iamarunchinna) March 7, 2022
கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் விளையாட்டு சில்லுகளும் கிடைத்துள்ளன. 3 அடி ஆழத்தில் தோண்டும் போது பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய குறிப்பாக பெண்கள் விளையாடுவதற்கு அதிகமாக பயன்படுத்திய வட்ட வடிவிலான பெரிதும் சிறிதுமாக அழகிய 2 சில்லுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை த் தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. கீழடி மட்டும்மில்லாமல் கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுப் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion