Train Time Change: தொடரும் பாம்பன் பராமரிப்பு பணிகள்.. ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்!
பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தற்போது ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இந்த நிலையில் ரயில்வே பொறியாளர்கள் சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த சில நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் இல்லாத காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
#Railway | ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10- ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
— arunchinna (@arunreporter92) December 30, 2022
Further reports to follow - @abpnadu #TRAIN | @drmmadurai | @LPRABHAKARANPR3 | @SRajaJourno | @pibchennai | @ABPNews pic.twitter.com/A5qOvtUk2Z
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்