எந்த நாட்டிலும் இதுபோன்ற தேர்தல் நடைமுறை கிடையாது - கொந்தளிக்கும் வைகோ
நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே தேர்தல் என்பது குமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்து எழ வேண்டிய பிரச்சனை - திண்டுக்கல்லில் வைகோ பேட்டி
2016ஆம் ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டில் மக்கள் நல கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (தேர்தல் தேதி அறிவிப்பு முன்) இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக வைகோ, மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் உட்பட கூட்டணி கட்சியினர் 12 பேர் மீது திண்டுக்கல் வடக்கு நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற 1ல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வைகோ, செல்வராகவன் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் 24.04.24 இல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற ஒன்றில் இந்த வழக்கை நான்கு மாதத்திற்குள் முடிக்கக் கூடிய அடிப்படையில் இன்று வைகோ உட்பட 12 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகினார் இந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,
* நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே தேர்தல் என்பது குமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்து எழ வேண்டிய பிரச்சனை. நெருக்கடி நிலையை விட இது மிகவும் மோசமானது. பல்வேறு நாடுகளில் இதே நிலை இருக்கிறது என்று சொன்னால் அங்கு ஜனநாயகம் கிடையாது.
* கூட்டாட்சி தத்துவம் இருக்கிற எந்த நாட்டிலும் இதுபோன்ற தேர்தல் நடைமுறை கிடையாது. மூன்று மாநிலங்களில் இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம். இது கொடியது மட்டுமில்லை. ஒரு இலக்கை அடைவதற்காக இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
* நமது பிரதமர் பதவி வேண்டாம் அமெரிக்க வை போல குடியரசுத் தலைவர் பதவி வாங்கிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி உள்ள கணக்கு அவரிடம் இருக்கிறது.
* வாஜ்பாய் இருந்தபோது பொது சிவில் சட்டத்திற்கு அஜந்தா எதுவும் போடவில்லை. இந்த நாடு சம தர்ம பூமி ஆக இருக்க வேண்டும். மதசார்பற்ற பூமியாக இருக்க வேண்டும். மதசார்பற்று இருந்தால் தான் ஒற்றுமை ஓங்கும். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் பின்பற்றி வந்த நிலையை பின்பற்ற முடியாமல் போய் விடும்.
* வாஜ்பாய் காலத்தில் அமுல்படுத்தாத பொது சிவில் சட்டம் இப்போது கொண்டு வரப்பட்டது. ராமர் சிவில் கோடு என்று இந்தத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறார். இது போன்ற கொடுமைகளை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.
* ஜெர்மனிக்கு ஹிட்லர், இத்தாலியில் முசோலினி, அதேபோல இடியமின் இவர்களின் மனநிலையில் தான் நமது தலைமை அமைச்சரின் உள்ளத்தில் இருக்கிறது.
* இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை இல்லை என்று அவர்களே தெரிவிக்கின்றனர். பெரும்பான்மை இல்லாமல் சாதாரணமாக நகராட்சிக்கு போடுகின்ற தீர்மானம் போல் நிறைவேற்றுகின்றனர்.
* இந்த நாட்டின் அரசியல் அமைப்பையே தகர்த்து இந்துத்துவா சனாதான முறையை கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் அடையாளம் தான் இது. இது எல்லோரையும், எல்லா கட்சிகளையும் பாதிக்கும்.
* இதனை ஊர் முழுவதும் கொண்டு சென்று அனைத்து மக்களையும் திரட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டும் என்பது நமது கடமை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து போராட வேண்டும்.
* வரும் நாட்களில் டெல்லி தலைநகராக இருக்காது. வாரணாசி தலைநகராக மாற்றப்படும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுரிமை கிடையாது என்ற நோக்கத்தில் வாரணாசியில் மாநாடு நடத்தியுள்ளனர்.
* நாங்கள் இறை வழிபாட்டுக்கு விரோதிகள் அல்ல. விருப்பப்படி அனைத்து மதத்தினரும் இருக்கலாம். எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டியது தான் மதசார்பற்ற தன்மை.
* தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற மோசமான கவர்னர் தமிழ்நாடு சரித்திரத்தில் வந்ததே இல்லை.
* தமிழ்நாடு ஆளுநர் ஒருநாள் பாரதியைப் பற்றி பேசுகிறார். ஒருநாள் தமிழைப் பற்றி பேசுகிறார் இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக செய்து வருகிறார். மத்திய மோடி அரசுக்கு ஏஜெண்டாக கவர்னர் செயல்படுகிறார். தமிழ்நாட்டிற்கு பெரும் கேடு இந்த இருக்கக்கூடியவர் கவர்னர்.
* கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று ராஜ்ய சபாவில் அன்றே கூறினார் அண்ணா. இந்தியாவில் கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்.
* சதுரங்கப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றது தமிழ்நாட்டுக்கே பெருமை அவருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
* திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்