மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai: மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது - ஓ.பி.எஸ் பேட்டி
மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி பாமர மக்களிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது. இது அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதிக்கும்.
![Madurai: மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது - ஓ.பி.எஸ் பேட்டி O.Pannerselvam says DMK government has given the biggest burden by raising electricity prices frequently - TNN Madurai: மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது - ஓ.பி.எஸ் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/a4e3f1c5e417f1f08a5ef583cc179d431721579886136184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓ.பி.எஸ்
Source : whats app
வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஓபிஎஸ் பேட்டி
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
பட்ஜெட் குறித்த கேள்விக்கு
வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடல் - எம்பி மாணிக்கம் தாகூர்
மின்சார கட்டணம் குறித்த கேள்விக்கு:
மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி பாமர மக்களிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது. இது அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதிக்கும்.
காவிரி நீர் விவகாரம் குறித்த கேள்விக்கு
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்துகின்ற, பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருப்பதால் தனக்குள்ள செல்வாக்கை வைத்து கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீரைப் பெற்றுத் தர முனைப்பாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு திமுக ஒருங்கிணைப்பு குழு அமைத்தது குறித்த கேள்விக்கு:
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முன்பு நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வாடிக்கையானது. ஆனால் இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது.
அம்மா உணவகம் குறித்த கேள்விக்கு:
அம்மா உணவகம் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள கோபம் மக்களுக்கு இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - எந்த பதவி கொடுத்தாலும்...-- துணை முதல்வர் பதவி குறித்து சூசகமாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கன்னியாகுமரி: மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்! இளநிலை பொறியாளரிடம் கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்ச பணம் ..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
பொழுதுபோக்கு
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion