மேலும் அறிய

கன்னியாகுமரி: மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்! இளநிலை பொறியாளரிடம் கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்ச பணம் ..!

”ஒப்பந்ததார்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது பொறியாளர் அலுவலகம். இங்கு இளநிலை பொறியாளராக சாம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிள்ளியூர், உண்ணாமலைக்கடை, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் மாறுவேடத்தில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சாம் செல்வராஜ் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்குவதை கண்டு கையும் களவுமாக பிடித்துள்ளார்.

தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் இளநிலை பொறியாளரை பிடித்து விசாரணை நடத்தி அவரை சோதனை செய்த போது அவரது பேன்ட் பாக்கெட், மணிபர்ஸ் ஆகிய இடங்களில் கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரது காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் ஒரு பையிலும், பின்பக்க  டிக்கியில் கோப்புகளுக்கு இடையேயும் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பணங்கள் எதுவும் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பறிமுதல் செய்த பணம் முழுவதையும் எண்ணி பார்த்தபோது சுமார் 5 லட்சத்து 34 ஆயிரம் ருபாய் இருந்தது தெரியவந்தது.

கன்னியாகுமரி:  மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்! இளநிலை பொறியாளரிடம் கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்ச பணம் ..!

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ் அவரது உதவியாளர் ஹரிஹரன் என்பவரையும் கைது செய்தனர். மேலும் ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த லஞ்ச பணத்தில் அரசு உயர் அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒப்பந்ததார்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தலைமைச் செயலாளரை திடீரென சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்; பரபர பின்னணி இதுதான்!
தலைமைச் செயலாளரை திடீரென சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்; பரபர பின்னணி இதுதான்!
Breaking News LIVE: குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Breaking News LIVE: குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை அருகே சோகம்.. ரயில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
சென்னை அருகே சோகம்.. ரயில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
"மானியம் வேணுமா? ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துங்க" தமிழ்நாட்டை எச்சரித்த மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru : ”KN நேருவை நெருங்கவே முடியல” சேலம் MLA-க்கு அடித்த JACKPOT! அமைச்சராகும் ராஜேந்திரன்?Kancheepuram Mayor Issue : ”திமுகவுடன் இணைந்த அதிமுக” தர்ணா செய்த கவுன்சிலர்கள்! அலறி ஓடிய மேயர்!Karti chidambaram | கொளுத்திப் போட்ட கார்த்தி! கடுப்பான காங்கிரஸ்! திமுக கூட்டணிக்குள் சிக்கல்?Jagan Mohan Reddy Flood Inspection | ”எங்களை காப்பாத்துன குலசாமி”ஜெகனிடம் ஓடிவந்த மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தலைமைச் செயலாளரை திடீரென சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்; பரபர பின்னணி இதுதான்!
தலைமைச் செயலாளரை திடீரென சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்; பரபர பின்னணி இதுதான்!
Breaking News LIVE: குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Breaking News LIVE: குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை அருகே சோகம்.. ரயில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
சென்னை அருகே சோகம்.. ரயில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
"மானியம் வேணுமா? ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துங்க" தமிழ்நாட்டை எச்சரித்த மத்திய அரசு
Govt Business Loan: 59 நிமிடங்களில் கையில் பணம், 15% மானியம் -  மத்திய அரசின் தொழில் கடன்கள் பற்றி தெரியுமா?
Govt Business Loan: 59 நிமிடங்களில் கையில் பணம், 15% மானியம் - மத்திய அரசின் தொழில் கடன்கள் பற்றி தெரியுமா?
மக்களுக்கு சேவை செய்ய தான் நம்ம இருக்கிறோம்...! அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக எம்.எல்.ஏ லட்சுமணன்
மக்களுக்கு சேவை செய்ய தான் நம்ம இருக்கிறோம்...! அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக எம்.எல்.ஏ லட்சுமணன்
New PPF Rules: பிபிஎஃப் விதிகளை மாற்றி மத்திய அரசு உத்தரவு - வட்டிகளை ரத்து செய்ய முடிவு, யாருக்கு நஷ்டம்?
New PPF Rules: பிபிஎஃப் விதிகளை மாற்றி மத்திய அரசு உத்தரவு - வட்டிகளை ரத்து செய்ய முடிவு, யாருக்கு நஷ்டம்?
Cucumber Pachadi : முகப்பொலிவு.. செம்ம ஆரோக்கியம்.. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி ரெசிப்பி இதோ..
Cucumber Pachadi : முகப்பொலிவு.. செம்ம ஆரோக்கியம்.. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி ரெசிப்பி இதோ..
Embed widget