மேலும் அறிய

புதிய பாம்பன் பாலத்திற்கு பாலி சிலிக்கான் பெயிண்டிங்; இது இத்தனை வருசம் தாங்கும் தெரியுமா?

பாம்பன் பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் மற்றும் சிறந்த கட்டுமான உத்திகளுடன் கட்டப்பட்டுள்ளது. - ரயில்வே நிர்வாகம்.

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் 

 
ரயில்வே நிர்வாகம் சார்பாக புதிய பாம்பன் பாலம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: புதிய பாம்பன் பாலம் பல்வேறு புதுமையான மற்றும் பாதுகாப்பான சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாம்பன் ரயில் பாலம் 2.05 கி.மீ. நீளத்திற்கு கடலின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக கப்பல் போக்குவரத்திற்காக செங்குத்தாக மேலே எழும்பி செல்லும் வகையில் நவீன பால அமைப்பு 72 மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய மற்றும் இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு சென்னை இந்திய தொழில்நுட்ப பல்கலைகழக வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய  அறிவுறுத்தலின்படி ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் செய்தன. 
 

தெற்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது.

 
மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த வடிவமைப்பை தீவிர ஆய்வு செய்ய மும்பை இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக  வல்லுனர்களை ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இரு முறை தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வடிவமைப்பை தெற்கு ரயில்வே அங்கீகரித்தது. எனவே இந்த புதிய பாலம் பிரபல சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் இரண்டு முக்கிய தொழில்நுட்ப பல்கலைக்கழக வல்லுநர்கள் ஆய்வு செய்து அங்கீகரித்த பின்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பு செய்த மாறுதல்களையும் இந்தியாவின் இரு பிரபல தொழில்நுட்ப பல்கலைக்கழக  வல்லுனர்கள் ஆய்விற்குப் பின்பு தெற்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது.
 

பாலி சிலிக்கான் வகை பெயிண்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது

பாலத்தின் செயல் திறனுக்கு இணைப்பு  பற்ற வைப்புகள் (வெல்டிங்) முக்கியம் வாய்ந்தவை. எனவே இந்த பற்றவைப்புகள் நவீன அல்ட்ராசானிக் இயந்திரம் மூலம் 100% சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் பற்றவைப்புகளை 100% சரி பார்த்துள்ளது. அதன் பிறகு தெற்கு ரயில்வே நிர்வாகமும் பற்ற வைப்புகளை சரிபார்த்தது.  உலகத்தில் அதிக அளவில் துருப்பிடிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாலி சிலிக்கான் வகை பெயிண்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்த வடிவமைப்பை 35 ஆண்டுகள் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும். மேலும் துரு பிடிக்காமல் தடுக்க தரமான இரும்பு,  தரமான கான்கிரீட் வடிவமைப்புகள், இணைப்புகளில் பலமான பற்றவைப்புகள், பாதைகளில் நெகிழியிழை அமைப்புகள், எளிதில் ஆய்வு செய்யும் வசதி, கைப்பிடி அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் மற்றும் சிறந்த கட்டுமான உத்திகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு முழுமையாக பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
 
 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget