மேலும் அறிய

'மதுரை ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே காரணம்' சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு..!

10 நாட்கள் கேஸ் சிலிண்டரோடு தீ பிடிக்கும் பொருட்களோடு பாதி இந்தியாவை பல்வேறு ரயில் நிலையங்களில் வழியாக கடந்து வந்துள்ளனர் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழு தோல்வியை காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை ரயில் விபத்து:

அப்போது அவர் கூறும் போது மதுரையில் இன்று நடைபெற்ற ரயில்வே விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். 

தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கேஸ் சிலிண்டர்களோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியா நெடுக பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு துறை:

இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும், ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு நடந்துள்ளது. இதுவே ரயில் வந்து கொண்டிருக்கும்போது நடந்திருந்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு விபத்தில் சேதம் இருந்திருக்கும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழுக்காரணம்.  

மதுரை ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே காரணம்' சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு..!

ரயில்வே பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப வேண்டும். பெண்களுக்கான பெட்டிகளில் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்பதற்காக பொது பெட்டிகளின் நடுவில் பெண்களுக்கான பெட்டிகளை இணைக்கிறோம் என்று ரயில்வே அதிகாரி அறிக்கை விட்டார். அவ்வளவு பாதுகாப்பு படையினர் இடங்கள் காலியாக உள்ளன.

போதிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இல்லை. கொள்கையும் இல்லை, சுற்றுலா பயணிகள் பயணிக்கின்ற பெட்டிகளை பாதுகாப்பு சோதனைகள் இடுவது சம்பந்தமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. அதேபோல் ரயில் பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவி ஏசி பெட்டிகளுக்கு மட்டுமே உள்ளது.

மதுரை ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே காரணம்' சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு..!

தீயணைப்பு கருவிகள் இல்லை:

ஏசி அல்லாதபெட்டிகளில் தீயணைப்பு  கருவிகள் இல்லை. சுற்றுலா பயணிகளில் கம்பார்ட்மெண்டில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். ரயில்வே நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் இரு பெரும் விபத்துக்களை சந்தித்து விட்டது. இருசக்கர வாகனத்தை ரயில் பெட்டியில் பார்சல் அனுப்ப வேண்டும் என்றாலே அந்த வாகனத்தில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் இருந்தால்தான் பார்சலுக்கே அனுமதிப்பார்கள். 

அதேபோல ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் கேஸ் அடுப்பு பயன்படுத்த கூடாது, மின்சார அடுப்பு தான் பயண்படுத்த வேண்டும் என்பதே விதி. ஆனால் 10 நாட்கள் கேஸ் சிலிண்டரோடு தீ பிடிக்கும் பொருட்களோடு பாதி இந்தியாவை பல்வேறு ரயில் நிலையங்களில் வழியாக கடந்து வந்துள்ளது. ஆனால் எங்கும் சோதனை செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tourist Train Fire Accident : மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து 9 பேர் உயிரிழப்பு ? காரணம் என்ன..? தீவிர விசாரணை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget