Keezhadi Excavation ; கீழடி 8-ஆம் கட்ட அகழாய்வில் 400-க்கும் மேற்பட்ட பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் !
70 மேற்பட்ட மாணவ மாணவிகளை கீழடிக்கு வரவழைத்து கீழடி அகழாய்வு பற்றி விளக்கம் அளித்து கலந்துரையாடினார்.
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Abpnadu | கீழடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அகழாய்வு பற்றி விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி. விடுமுறை தினத்தில் கீழடியில் குவிந்த பார்வையாளர்கள்.
— Arunchinna (@iamarunchinna) April 3, 2022
Further reports to follow - @abpnadu | - @SRajaJourno | @guna_2403 | @kathiravan_vk | @saranram | @harisanjay2011 .. pic.twitter.com/GAR4cclTiL