மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
இந்திய பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து சமூக மக்களுக்கான பிரதமராக இருக்க வேண்டும். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேட்டி
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறும் பிரையண்ட் பூங்காவில் உள்ள பூக்களை பார்த்து ரசித்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய திட்டத்தினால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி சமத்துவம் தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் தான் இந்தியா கூட்டணி .
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
இந்தியா கூட்டணியை உருவாக்கிய பிதாமகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டில் பல்வேறு சீரிய திட்டங்கள் முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் முன்னேற்றத்தில் சிறந்து விளங்குகிறது. கல்வி முன்னேற்றத்தில் சிறந்து விளங்குகின்றது. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் தான் இந்தியா கூட்டணியில் எதிரொலிக்கின்றது.
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
இந்திய பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். பிரதமர் மோடி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அனைத்து சமுதாய மக்களுக்கான பிரதமராகவும் அவர் இருக்க வேண்டும். ஒருவேளை அவருக்கு வயது ஆகிவிட்ட காரணத்தினால் இப்படி பேசுகிறாரோ அல்லது மறதி காரணமாக இப்படி பேசுகிறாரோ என்று தெரியவில்லை. இந்தியாவில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது என்று கூறுகிறார்கள். இப்போது ஜனநாயகம் எங்கே இருக்கிறது. 22 கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு 22 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால் சிறிய விவசாயிகளுக்கோ கடன் தள்ளுபடி செய்ய இந்த மோடி அரசு முன்வரவில்லை.
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் மோடி அரசு சிறு குறு தொழில்களை நசுக்கி வருகிறது. அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் சிறு குறு தொழில் நிறுவனங்களை மோடி அரசு வஞ்சிப்பதால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரை யாரும் மிரட்ட முடியாது அவர் கலைஞரின் மகன் மக்களுக்கு மட்டுமே அவர் பயப்படுவார் வேறு யாருக்கும் அவர் பயப்பட மாட்டார். இந்தியா கூட்டணி வெல்லும்" இவ்வாறு அவர் பேசினார்.