மேலும் அறிய

”அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

”தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" - செல்லூர் ராஜூ.

நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை, தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள் வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே என மதுரையில் செல்லூர் கே.ராஜூ பேட்டி. 
 
மதுரையில் அ.தி.மு.க., மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில் "போருக்கு தயாராக உள்ளது போல அ.தி.மு.க., பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வது போல அ.தி.மு.க., தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார்.

”அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை
 
தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அ.தி.மு.க., தயாராக உள்ளது. தேசிய அளவில் செயல்படும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாநாட்டை தீவிரவாதிகள் மாநாடு என அண்ணாமலை வாய்கொழுப்புடன் பேசி உள்ளார். அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.  தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மை போல காட்சி அளிக்கிறார்கள் அல்லவா, அதுபோல அல்லாமல் வெற்றி பெறும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பார்கள், நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை.  தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள் வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே.


”அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை
 
தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வுக்கு பாதிப்புகள் வரும் என எண்ணியே சட்டமன்றத்தில் துணை தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.  துணைத் தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏவாக பதவி வகித்தது பக்கத்து வீட்டுகாரருக்கே தெரியாதவர்களை எல்லாம் பா.ஜ.கவில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை, தலைமுடி போல தான். உதிர்ந்ததை பற்றி நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. அ.தி.மு.க., கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் கூட்டணிக்கு கொடுத்த முழு அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என தெரிவித்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget