"இபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிட்டால்" என ஓபிஎஸ் பேசியது மிக மோசமான வார்த்தை - ராஜன் செல்லப்பா
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மையினர் அதிகமாக கட்சியில் சேருகிறார்கள்
ஓ.பி.எஸ் முடிந்து போன வரலாறு; எழுதப்பட்ட ஓவியம்; இபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் என்று அவர் பேசுவது மிக மோசமான வார்த்தைகளை சில நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் பயன்படுத்துவது அவருக்கே இழுக்கு. -ராஜன் செல்லப்பா பேட்டி.
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கண்மாயிக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கம்பிக்கூடு பாசன கால்வாயில் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வடிவேல் கரை ஊருக்குள் புகுந்தது. இந்த பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் உள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதுபோன்று அடிக்கடி இந்த கால்வாய் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளதாகவும், தற்போது அதிக அளவு தண்ணீர் ஊருக்குள் வந்திருப்பதாகவும் இதனால் அப்பகுதி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் 27-12-2023 அன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200-க்கும் மேற்பட்ட வடிவேல்கரை கிராம மக்களுக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறுகையில்.
தென் மாவட்ட வெள்ள பாதிப்பு நிதிக்காக மத்திய அரசிடம் இ.பி.எஸ்., அழுத்தம் கொடுப்பாரா என்ற கேள்விக்கு:
எந்த தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் இதுவரை கேட்ட எந்த நிதியும் வழங்கப்பட்டதில்லை. கூட்டணியில் இருந்த போது நாங்கள் கொடுத்த எந்த மனுவையும் தற்போதைய மத்திய அரசு நிறைவேற்றவில்லை. உரிமைகளை பெறுவதற்காக இபிஎஸ் கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.
இபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பது என்று ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:
ஓபிஎஸ் முடிந்து போன வரலாறு; எழுதப்பட்ட ஓவியம்; இபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் என்று அவர் பேசுவது மிக மோசமான வார்த்தைகளை சில நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் பயன்படுத்துவது அவருக்கே இழுக்கு.
முதல்வர் மத்திய அரசு; ஒன்றிய அரசு என்று மாற்றி கூறுவது குறித்த கேள்விக்கு:
மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று கூறுவது மட்டுமல்லாமல் ஒரு கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்திருப்பதை தவறு அதை அவர்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.
கூட்டணி குறித்த கேள்விக்கு:
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மையினர் அதிகமாக கட்சியில் சேருகிறார்கள்.