மேலும் அறிய

மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. மூன்று நாள் நிகழ்ச்சிகள் என்னென்ன?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் மனோஜை அச்சம்பத்து பகுதியில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க., தொண்டர்கள் சார்பில் மூன்று நாட்களும்  பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வருகை தந்த நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை மாநகர் பகுதியில் இரவு ஓய்வு எடுத்துக் கொண்டார்.

- Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

இன்று 9.9.2024  மதுரையில் பங்கேற்கும்  நிகழ்ச்சிகள் விபரம்

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் காலை 10.30 மணியளவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு, இடைப்பட்ட நேரத்தில் திருமுகூர் சாலை மற்றும்  எஸ்.எஸ் காலனி பகுதியில் கலைஞர் நூலகங்களை திறந்து வைக்கிறார். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் மனோஜை அச்சம்பத்து வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

நாளை 10.9.2024 சிவகங்கை மறுநாள் ராமநாதபுரம்

நாளை 10ம் தேதி­ காலை 10.00 மணி அளவில்  சிவ­கங்கை மாவட்ட விளை­யாட்டு மைதா­னத்­தில், முதல்­வ­ர் கோப்பைக்கான விளை­யாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கிறார். காலை.10.30 மணிக்கு சிவ­கங்கை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக அரங்­கில் மாவட்ட அள­வில் நடை­பெற்று வரும் அரசு திட்­டப்­ப­ணி­கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

மதியம் 1 மணியளவில்  காளை­யார் கோவில் ­தா­லுகா நக­ரம்­பட்­டி­யில் நடை­பெற்று வரும் சுதந்­திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்­ப­லம் நினைவு மண்­ட­பம் கட்­டி­டப் பணி­கள் குறித்து ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து சிரா­வ­ய­லில் நடை­பெற்று வரும் அண்­ணல் காந்தி ஜீவா நினைவு மண்­ட­பம் கட்­டி­டப் பணிகளை ஆய்வு செய்கிறார். மாலை 4:30 மணிக்கு காரைக்­குடி அழ­கப்பா பல்­க­லைக்­க­ழக வளாக அரங்­கில் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கு­கிறார். மாலை 6.00மணிக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். இரவு மதுரையில் மீண்டும் விடுதியில் தங்­கு­கிறார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் பல்வேறு துறை அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடிக்கப்படும் என எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK ; ”தவெக” வுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்! மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
"நீதான்டா நல்ல ஃப்ரண்ட்” .. நண்பனை ஆட்டோவுடன் சேர்த்து கொளுத்திய 3 பேர்!
Embed widget