மேலும் அறிய

TVK ; ”தவெக” வுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்! மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் !

தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

மதுரையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும்  இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்.
 
தவெகவுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்:

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். அதோடு, கட்சிப்பாடலையும் வெளியிட்டார். ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?

 

விஜய் போடும் மாஸ்டர் பிளான்:

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்தனர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. கட்சியின் முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மதுரையில் கொண்டாட்டம்
 
தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அக்கட்சியினுடைய தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை 11 மணியளவில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை தலைமையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கியும், வியாபாரிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது உங்கள் ஆதரவை 2026 தேர்தலில் தரும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget