மேலும் அறிய

ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

திமுக, அதிமுக இடையே தான் குதிரை பேரம் நடக்கிறது, திமுகவும் - அதிமுகவும் இணைந்து பாஜகவுடன் கூட்டணிவைத்து அமைச்சர் பதவி பெற தயாராகவுள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

அரசு மருத்துவமனை போன்ற பொதுநிகழ்ச்சிகளில் தவெகவினர் ரீல்ஸ் எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.

போலியோ சொட்டு மருந்து முகாம்
 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார்..," டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அது பெரிய பொறுப்பும் இல்லை. பெரிய பதவியும் இல்லை. அது பேச வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை கையாண்டு வரும் தனியார் நிறுவனம் குப்பைகளுக்கு பதில் மணலை கொண்டு சென்று கொட்டி வந்துள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே புகார் வந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு 1000 டன் குப்பைகளுக்கு பதிலாக மணலை கொண்டு சென்ற போது லாரிகள் பிடிபட்டுள்ளது. குப்பைகளுக்கு பதில் மணலை அள்ளி கணக்கு காட்டுவதற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களைத் தான் திமுக ஆட்சியில் போற்றி பாதுகாத்து வந்துள்ளார்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கூட இரண்டு லாரிகள் அது போல பிடிபட்டிருக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
 
அரசு மருத்துவமனை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததோடு, அதிக பேர் போனில் ரீல்ஸ் எடுப்பது குறித்த கேள்விக்கு,
 
கட்சி நிர்வாகிகள் வருகைக்காகவோ யாருக்காகவும் நாங்கள் எந்த நிகழ்ச்சியையும் நிறுத்த சொல்லவில்லை. எல்லா இடத்திலும் நிகழ்ச்சி நடத்த சொல்லி இருக்கிறோம். 10 பேர் 15 பேர் தொலைபேசியில் எடுப்பதால் யாருக்கு எந்த தொந்தரவும் இல்லை. அரசு மருத்துவமனையில் நிறைய பிரச்னைகள் உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்றைவு உள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளது.  விரிவாக்க பணிக்கு இடம் கேட்டு 10 வருடமாக காத்துக் கொண்டுள்ளனர். அரசு மருத்துவமனையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா இடத்திலும் கட்டிடம் உள்ளது ஆனால் ஊழியர்கள் இல்லை. கட்டடங்களாக இருக்கிறது ஆனால் பணி செய்ய ஆளில்லை. இதையெல்லாம் சரி செய்ய உள்ளோம். குதிரை பேரம் ஒட்டக பேரம் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அவர்களுக்குள் செய்துள்ளார்கள். இரண்டு பேரும் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி செய்ததன் விளைவாகத்தான் ஒவ்வொருவரும் விலகிச் செல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து திமுகவில் இனிமேல் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி கட்சிகளை நிர்பந்தித்து ஆட்சி அமைக்க திட்டமிடுகிறார்கள். 
 
திமுகவில் இனி அரசியல் எதிர்காலம் இருக்காது அதை விட்டு ஒதுங்கிவிடலாம் என சிலர் நினைப்பதாக தகவல் வருகிறது. 
 
குதிரை, ஒட்டக பேரம் எடப்பாடி ஸ்டாலினும் சேர்ந்து என்னென்ன செய்தார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலே கடினமாகிவிடும். திமுக அதிமுக என எல்லோரும் ஒன்றிணைய தயாராகி விட்டார்கள். இரண்டு பேரும் கடைசியில் தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதிமுகவும் திமுகவும் ஒன்றிணை தயாராகி விட்டார்கள். விரைவிலேயே பாஜகவோடு இணைந்து அதிமுகவும் திமுகவும் சேர்ந்து அமைச்சர் பதவி கூட வாங்க தயாராக உள்ளார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தல் என்றும் தனியாக நின்று வெற்றி பெற்றோம். மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் மக்கள் நம்பிக்கை யார் மீது வைத்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரியும் என பேசினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget