மேலும் அறிய

TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !

உதவி பேராசிரியர், தேர்வு முடிவுகளை முழுமையான விசாரணை செய்து, தவறுகள் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

'கட் அண்ட் காப்பி' (Cut & Copy), செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது வேற ஏதேனும் மென்பொருள் மூலம் இது செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது?. தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.

TRB மூலம் உதவி பேராசிரியர் (Assistant Professor) தேர்வு

TRB மூலம் உதவி பேராசிரியர் (Assistant Professor) தேர்வு என்பது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர் தேர்வானது நடைபெற்றது. சுமார் 2708 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக கடந்த திமுக ஆட்சி காலத்தில் 5 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது. அப்போதே இந்த தேர்வில் குளறுபடி இருப்பதாக பிரச்னைகள் வெடித்தது.

அவசர கதியில் கடுமையான குளறுபடியுடன் வெளியானது?

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் முழுமையாக தேர்வின் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்ற சிலருக்கு விவரிப்பு (Descriptive) தாளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு விவரிப்பு தாளில் அதிக மதிப்பெண்கள் கிடைத்ததாக தேர்வர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் 2017 நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான உதவி பேராசியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் இருப்பதாக ஏற்பட்ட தேர்வு பிரச்னை முழுமையாக விசாரணை முடியாத சூழலில், தற்போது வெளியாயிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குமே அதே பிரச்னைகள் எழுந்துள்ளது. அவசர கதியில் திடீரென உதவி பேராசிரியர் தேர்வு ரிசல்ட்  கடுமையான குளறுபடியுடன் வெளியாகியுள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.

தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்வு முடிவுகளில் தாள் - II ல்  ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் 50க்கு 49 முதல் 0 வரை. உதாரணத்திற்கு ஒரு தேர்வர் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்று தன்னுடைய முதன்மைத் தாளில் (தாள் - I) 150 க்கு 111 மதிப்பெண் பெற்றிருக்கிறார். ஆனால் தாள் - II ல் அவர் பெற்ற மதிப்பெண் பூஜ்ஜியம்(0). விடைத்தாள்கள் உண்மையில் மதிப்பீடு செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது?. ஒருவேளை 'கட் அண்ட் காப்பி' (Cut & Copy), செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது வேற ஏதேனும் மென்பொருள் மூலம் இது செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது?. தேர்வர்கள் மன உளைச்சலில் செய்வதரியாது புலம்புகின்றனர்.

முழுமையான விசாரணை வேண்டும்

மேலும் அதிமுக ஆட்சியில் 2017 ஆண்டு  அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கான உதவி பேராசிரியர் பணிக்கு நடை பெற்றமுறைகேட்டுகளை விட இப்போதும் திமுக ஆட்சியில் நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் சந்தேகங்களை எழுப்பி தமிழ்நாட்டை பரபரப்பாக்கியுள்ளது. தமிழ் பாடத்தில் பக்கம் 84 முதல் 87 வரை உள்ள தேர்வர்களில் Part B ல் 81மதிப்பெண் எடுத்தவர்கள் அனைவருமே PART C ல் 12 மதிப்பெண் எடுத்துள்ளனர். 87 பக்கத்திலிருந்து PART B ல் 81 மதிப்பெண் எடுத்தவர்கள் PART C ல் 11.50 எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக தேர்வர்கள் அதிர்ந்துள்ளனர். தாள் I, தாள் II மற்றும் தாள் III என மூன்று முடிவுகளையும் ஆய்வு செய்தால் இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புகள் வரலாமென சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வு முடிவுகளை முழுமையான விசாரணை செய்து, தவறுகள் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget