ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Triumph நிறுவனத்தின் Speed T4 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Triumph. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இவர்களின் Triumph Speed T4 பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.
Triumph Speed T4:
இவர்களின் Triumph Speed T4 பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 47 ஆயிரத்து 863. இதில் 349 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 180 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 806 மி.மீட்டர் ஆகும். இதில் 6 கியர்கள் உள்ளது.
390 கி.மீட்டர் மைலேஜ்:
அதிகபட்சமாக இந்த பைக்கில் 137 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 1 கியர் கீழேவும் மற்ற 5 கியர்கள் மேலேவும் உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. இதில் 28.6 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் திறன் கொண்டது. இதில் 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 390 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
சிறப்புகள்:
டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும்.
13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 2.6 லிட்டர் ரிசர்வ் வசதி உள்ளது. 2 வருட வாரண்டி உள்ளது. செமி டிஜிட்டல் கன்சோல் வசதி உள்ளது. அனலோக் வசதி உள்ளது. ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
வசதிகள்:
ஹை பீம் இண்டிகேட்டர் வசதி, எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி, மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர், கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலில் எரியும் வசதி கொண்டது. எல்இடி ப்ரேக்/டெயில் விளக்குகள் உள்ளது. எல்இடி விளக்குகள் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















