மேலும் அறிய
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
16 பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

சிவகங்கை
Source : whatsapp
தொடர்ந்து பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படும். - எனவும் தெரித்துள்ளனர்.
அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்
சிவகங்கை மாவட்டதில் அனுமதிபெறாமல் விதிகளை மீறி செயல்படும் கீழ்காணும் இளம் மழலையர் பள்ளிகள் தனது பள்ளி செயல்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி, தொடர்ந்து பள்ளியை நடத்தக்கூடாது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(4) & 18(5)-ன்படி அனுமதி பெறாமல் தொடர்ந்து பள்ளியினை நடத்துவது குற்றவியல் சட்ட விதி மீறல் ஆகும். தொடர்ந்து பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்
ஸ்கூபி கிட்ஸ் பள்ளி, காரைக்குடி, கற்பிப்போம் மழலையர் பள்ளி காரைக்குடி, காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, வி.டி. கிண்டர்கார்டன், காரைக்குடி எஸ்.கே.ஒய் கிட்ஸ் பள்ளி, திருப்பத்தூர் சாஸ்த்தா கிட்ஸ் பள்ளி, காரைக்குடி யூகே கிட்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல், காரைக்குடி லிட்டில் பீ கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி லிட்டில் ஜீனியஸ் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, இன்டல் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, சாமி மீனாள் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, கேரியன்ஸ் ப்ளே ஸ்கூல், கிரீன் பார்க் ப்ளே ஸ்கூல், சிசு வித்யாலாயா பள்ளி, ஹேப்பி கிட்ஸ் ப்ளே ஸ்கூல், குட்வில் ப்ளே ஸ்கூல் மேற்கண்ட அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















