மேலும் அறிய
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவுசெய்து சிலை தயாரித்துள்ளோம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்க கோரி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த வடமாநில சிலை தயாரிப்பு தொழிலாளர்கள்.

விநாயகர் சிலை
மதுரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக கூறி சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி்- வடமாநில தொழிலாளர்கள் அதிர்ச்சி.
சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் வடமாநில தொழிலாளர்கள்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தின் போது அதிக அளவிற்கு சிலை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு வித விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலமாக விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர்.
மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி
இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில சிலை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், விதிகளுக்கு உட்பட்டு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இது தொடர்பாக பேசிய சிலை தயாரிப்பு தொழிலாளர்கள்...," ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவுசெய்து சிலை தயாரித்துள்ளோம் இப்போது தயாரித்த சிலைகளை அடைத்து அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்" என தெரிவித்தனர்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















