மேலும் அறிய
Advertisement
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்தது - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஐடியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து ஏதும் கடந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் ஓா் அங்கமான ‘டிஜிட்ஆல்’ (digit all) அமைப்பு சாா்பில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் ‘சங்கமம் 2022’ மதுரையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டார். மேலும் தொழில் முனைவோர், பட்டதாரி இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர்," எல்லா மாவட்டத்திலும் டிஜிட்டலைசேசன் பணிகள் துவங்கிவிட்டது. தென் தமிழகத்தை ஐ.டி துறையை முன்னேற்றுவதற்கு எல்லா பணிகளும் நடைபெற்று வருகிறது. அதே போல் தமிழக முதல்வர் மதுரையில் புதிய தகவல்தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மதுரையில் இலந்தைக்குளம், வடபழஞ்சி ஆகிய இரண்டு ஐ.டி பூங்காக்கள் உள்ளது. இலந்தைகுளம் ஐடி பூங்கா முழுமையாக செயல்பட்டு வருகிறது. அதேபோல வடபழஞ்சி ஐடி பூங்கா எழுவது சதவீத இடங்கள் நிரம்பி விட்டன, அதன் தேவைக்கு ஏற்ப புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கூறியது போல மதுரையில் ஏரோஸ்பேஸ் பார்க் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். ஐ.டி துறையில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 30% வளர்ச்சி அடைந்து வருவாயிட்டி உள்ளது. திருநெல்வேலியில் ரோல் சென்டர் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழ் என்பது பெருமை தமிழின் பெருமை என்பது எல்லோரையும் சமமாக ஏற்றுக் கொள்வது, நாம் அனைவரும் பிறப்பால் தமிழன் இனத்தால் திராவிடர்கள். உள்ளூரில் இருக்கும் போது தான் அனைவரும் ஜாதி பற்றி பேசுகின்றனர், வெளிநாடு வெளியுல இருக்கு சென்று விட்டாள் இந்த அடையாளத்தை மறந்து விடுகின்றனர். உலகமெல்லாம் சுற்றும் பிரதமர் அடையாளங்களை இங்கு மட்டும் ஏன் தூக்கிப் பிடிக்கிறார் என கேள்வி எழுப்பினார், மேலும் தமிழ்நாடு ஐடி துறை வளர்ச்சியில் கை ஓங்கி நிற்கிறது, Inclusive development, Inclusive growth இதை செயல்படுத்தி காட்டியவர் தமிழக முதல்வர்" என பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில் வேலைகள் வேகமடைந்துள்ளன. கடந்த 4 மாதத்தில் மாவட்டங்களில் ஒரு லட்சம் கோப்புக்கள் பார்க்கப்பட்டுள்ளன. இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். காகிதம் இல்லா அலுவலகம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்தது அது குறித்து யாருடனாலும் விவாதம் செய்ய நான் தயார். ஐ.டியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம் இதுகுறித்து ஏதும் கடந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை .
ஐ.டி எக்ஸ்போர்ட் மூலம் மதுரைக்கு கடந்த ஆண்டு மட்டும் 1120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மாநில அளவில் 4வது இடம். இ.ஆபிஸ் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை அடையும் குறைகள் சீர் செய்யப்படும். தமிழகம் ஐ.டிதுறையில் 30% வளர்ச்சியை எட்டியுள்ளது. இ.ஆபிஸ் திட்டம் இந்தியத் துணை கண்டத்தில் தமிழகத்தில்தான் செயல்படுத்தி உள்ளோம்" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion