மேலும் அறிய
Advertisement
Madurai: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிய பகுதிகளில் தொடரும் தீ விபத்துகள் ; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
தீ விபத்துக்கள் நடைபெறாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து - கோவிலை சுற்றிய பகுதிகளில் தொடரும் தீ விபத்துகளால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் 300க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மற்றும் நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வர். இதே போன்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த வழியாக செல்வர். நகை கடை பஜார் என அழைக்கப்படும் இந்த பகுதியில் அடுத்தடுத்த கட்டிடங்களில் போதிய இடைவெளியின்றி கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு செயல்பட்டு வந்த வாசவி ஜுவல்லர்ஸ் என்ற வெள்ளி நகை விற்பனை கடையில் கடந்த சனிக்கிழமை மதிய உணவுக்கு ஊழியர்கள் கடையை அடைத்து சென்றுள்ளனர்.
அப்போது கடையின் உட்புறத்தில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அடுத்தடுத்து பரவாத வகையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடையினுள் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள தெற்குமாசி வீதியில் உள்ள நகைகடையிலும், அதே பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்தும் ஏற்பட்ட நிலையில் கோயிலை சுற்றி அடுத்தடுத்து நடைபெறக்கூடிய தீ விபத்துகளால் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்பட்டு வருகிறது. எனவே பாதுகாக்கப்பட்ட பகுதியான மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகள் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இது போன்ற தீ விபத்துக்கள் நடைபெறாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Letter: மிக்ஜாம் புயல் பாதிப்பு: கடன் தவணையை நீட்டிச்சு அறிவிங்க.. நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMDK Meeting: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion