மேலும் அறிய

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கு ; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை..

அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த விவேக்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழ்நாட்டில் (E.D) அதிகாரிகள் தற்போது பதவியில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சொந்தமான இடங்களிலும், அவர்கள் தொடர்புள்ள இடங்களிலும் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்  அமலாக்கத்துறை மீது பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக கூறி மதுரை மண்டல துனை  அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட போன் , ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் இந்த அத்துமீறிய சோதனை குறித்து மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல உதவி இயக்குனர் தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழக தலைமை  செயலாளருக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 
Tamil Nadu anti corruption officials rushes to ED office after ED officer caught accepting bribe red handed ED Officer: மதுரை ED அலுவலகத்தில் ரெய்டு.. கைதான அமலாக்கத்துறை அதிகாரி.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
 
 மத்திய அரசின் அமலாக்கத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத போது அமலாக்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டால் அது அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை பாதிக்கும்.
 
இந்த விசாரணையை மாநில அரசு மேற்கொண்டால் நியாயமான விசாரணை நடைபெறாது. எனவே அமலாக்கத்துறை அதிகாரி கைது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,  அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் விதிகளை மீறி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
 
அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை,  சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கு ; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை..
 
இந்த வழக்கு என்று நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. தமிழ் நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்  சண்முக சுந்தரம்  ஆஜராகி வாதிடுகையில் லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் ஒன்றி அரசு ,மாநில அரசு ஊழியர்கள் இதுபோன்று இலஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும்போது அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முழு அதிகாரம் உள்ளது. அதற்கென தனி காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்வதற்கு முழு அதிகாரம் படைத்தது இது குறித்து ஏற்கனவே பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன என உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை,  சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கு ; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை..
 
தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி வாதிடுகையில். கைது நடவடிக்கையின் போது அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் அமலாக்க துறை அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்ட நபரின் வீடுகளில் சோதனை இடும்போது எந்த ஒரு விதிமுறை மீறல்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபடவில்லை இது அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
 
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி வாதிடுகையில். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர் கைது நடவடிக்கைகள் என்பது சட்ட ரீதியாக எடுக்கப்பட்டது மேலும் இது போன்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாநில உயர் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டினார்.
 
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ,”ஒன்றிய அரசின் அதிகாரிகள் தவறு செய்யும்போது பிடிபட்டால் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. இதுகுறித்து உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அணுகுமுறை சட்ட ரீதியானது லஞ்சம் வாங்கும்போது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
சம்பந்தப்பட்ட நபரின் அலுவலகம் குடியிருப்புகளில் சோதனை செய்வது விதிமுறைகளுக்கு உட்பட்டது இதில் விதிமுறை மீறல்கள் இல்லை. அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்வதற்கும் விசாரணை நடத்துவதற்கும் முழு அதிகாரம் உள்ளது. மனுதாரர் கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியது என்பது தேவையற்ற ஒன்று.
 
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரத்தை மீண்டும் இந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது என்பது அவசியம் அற்றது எனவே இந்த வழக்கு என்பது தேவையற்ற ஒன்று எனவே நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget