மேலும் அறிய
Advertisement
Road to Give 2023: தொழுநோயாளிகள் மேம்பாட்டை வலியுறுத்தி மதுரையில் " ரோடு டு கிவ் 2023" என்ற தலைப்பில் மாராத்தான் !
"ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் ஆப் இந்தியா" என்ற அமைப்பிற்கு தொழுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக மேம்பாடு மற்றும் கல்வி போன்ற உதவிகளுக்காக வழங்கிவருகின்றனர்.
தொழுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கல்வி, மருத்துவ பராமரிப்பு, சமூக மேம்பாட்டை வலியுறுத்தி மதுரையில் " ரோடு டு கிவ் 2023" என்ற தலைப்பில் மாராத்தான் - ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்பு.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் களங்கத்ததை துடைத்து அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கவும், தரமான கல்வி, மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூக மேம்பாட்டின் மூலம் ஆரோக்கியமான பயனுள்ள வாழ்கையை வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தெற்காசியாவில் உள்ள பிரபல மேரியாட் இண்டர்நேஷனல் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட் வருடாந்திர தொண்டு ஓட்டம் என்ற அடிப்படையில் ரோடு டு கிவ் 2023 என்ற தலைப்பிலான மாராத்தான் இன்று காலை நடைபெற்றது.
#madurai | தொடங்கிய வடகிழக்கு பருவமழை மதுரையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு - மழைநீரில் ஊர்ந்துசென்ற வாகனங்கள்.#RainyDays | @SRajaJourno | @arunavijay1970 | @imanojprabakar | @JSKGopi | @ChennaiRains | @SuVe4Madurai | @ramaniprabadevi | pic.twitter.com/mvtKan8vy3
— arunchinna (@arunreporter92) October 22, 2023
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாரியாட் ஹோட்டலில் இருந்து தொடங்கிய இந்த மாராத்தான் போட்டியை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து இந்த மாராத்தான் 5 கிலோ மீட்டர்வரை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர். முன்னதாக தொழுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மீதான சமூகத்தில் ஏற்படும் அவலங்களை போக்குவதையும், அவர்களுக்கான உதவிகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக இளைஞர்கள் எடுத்துரைத்தனர்.
மேரியாட் இண்டர்நேஷனல் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட் குழுமத்திற்கு உட்பட்ட 156 ஹோட்டல்களிலும் இதற்கு ஆதரவு அளித்து மாராத்தான், சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலமாக கிடைக்கும் நிதியை சென்னையை மையதளமாக கொண்ட "ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் ஆப் இந்தியா" என்ற அமைப்பிற்கு தொழுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக மேம்பாடு மற்றும் கல்வி போன்ற உதவிகளுக்காக வழங்கி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
சென்னை
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion