மேலும் அறிய
உசிலம்பட்டி பள்ளி குழந்தைகள் நெகிழ்ச்சி: காலை உணவு திட்டத்திற்கு நன்றி கூறி தபால் அட்டை!
முதல்ருக்கு நன்றி தெரிவித்து நன்றி மடல் மற்றும் எழுத்து வடிவில் அமர்ந்து நன்றியை வெளிப்படுத்தியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

காலை உணவுத்திட்டம்
Source : whats app
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உசிலம்பட்டியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மழலைகள் தபால் அட்டையில் நன்றி மடல் அனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் காலை உணவுத்திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் அரசு உதவிப்பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்க திட்டத்தினை இன்று (26.08.2025) தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி, பார்வையிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினார்கள். ஏற்கனவே கடந்த 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உசிலம்பட்டியில் 500- க்கும் மேற்பட்ட பள்ளி மழலைகள் தபால் அட்டையில் நன்றி மடல் அனுப்பி வைத்தனர்.
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தபால் அட்டை
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசு பள்ளிகளில் துவங்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உருவான சூழலில், இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டத்தை முதல்வர் விரிவாக்கம் செய்தார். அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பயிலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், காலை உணவை உண்ட கையோடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தபால் அட்டையில் தங்கள் கைகளாலேயே எழுதி நன்றி மடல்களை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.
எழுத்து வடிவில் அமர்ந்து நன்றியை வெளிப்படுத்தினர்
இதில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 100 க்கும் மேற்பட்ட மழலைகள் "காலை உணவு திட்டம் தந்தமைக்கு நன்றி தாத்தா" என எழுதி தபால் அட்டை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 350 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்திலேயே THANK YOU CM என எழுத்து வடிவில் அமர்ந்து நன்றி தெரிவித்தனர். திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நாளில் பள்ளி மழலைகள் முதல்ருக்கு நன்றி தெரிவித்து நன்றி மடல் மற்றும் எழுத்து வடிவில் அமர்ந்து நன்றியை வெளிப்படுத்தியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















