மேலும் அறிய
விஜயை அடக்கி வாசிக்க சொன்ன திமுக நிர்வாகி ! மதுரை போஸ்டரில் பரபரப்பு: சூடு பிடிக்கும் அரசியல் களம் !
மதுரை திமுக நிர்வாகி போஸ்டரில் "வாட் ப்ரோ ஓவர் ப்ரோ அடக்கி வாசிங்க ப்ரோ" என்று வசனம் இடம்பெற்றுள்ளது

விஜய் போஸ்டர்
Source : whats app
அடக்கி வாசிங்க ப்ரோ என விஜயை குறிப்பிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுகவினர் சார்பில் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.
ஆளுமைகளுக்கு எதிராக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக என்ற இரு மிகப்பெரிய ஆளுமைகளுக்கு எதிராக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய்.
கூட்டணி அழைப்பு விடுத்த தவெக:
வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது. கட்சி தொடங்கிய பிறகு பெரிதும் பரபரப்பாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது அறிக்கை, பொது மேடை என இயங்கி வருகிறார் விஜய். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.
தனித்து நிற்கும் விஜய்
நடிகர் விஜய்க்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் தமிழக அரசியலில் தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பால் அவர் பக்கம் சில கட்சிகள் சாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடன் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.,வினர் ஒட்டிய போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய்க்கு எதிராக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்
மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் ஸ்டாலினை அங்கிள் என்று விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயை குறிப்பிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில்..,” விஜய் குறிப்பிட்டு "வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ" என்று வசனம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















