Madurai: உசிலம்பட்டி காவல் நிலையம் முன்பே இரு தரப்பினர் மோதிக் கொண்ட விவகாரம் - 20 பேர் மீது வழக்கு பதிவு
20 பேர் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Madurai: உசிலம்பட்டி காவல் நிலையம் முன்பே இரு தரப்பினர் மோதிக் கொண்ட விவகாரம் - 20 பேர் மீது வழக்கு பதிவு Madurai Two parties clashed before Usilampatti police station case registered against 20 people Madurai: உசிலம்பட்டி காவல் நிலையம் முன்பே இரு தரப்பினர் மோதிக் கொண்ட விவகாரம் - 20 பேர் மீது வழக்கு பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/7e7cc714bcc601a5812b6c40024c00cd1661138834941184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உசிலம்பட்டியில் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த இடத்தில் காவல் நிலையம் முன்பே இரு தரப்பினர் மோதிக் கொண்ட விவகாரம் - 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராணுவ வீரர் மீது புகார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ராமன்., இவர் இந்திய இராணுவ வீரராக ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்., இவரது கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்ற இளம்பெண்ணை திருமண ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாக, ரேவதி அளித்த புகாரின் பேரில் விசாரணைக்காக உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் ஆஜராகினர்.
20 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த விசாரணையில் இராணுவ வீரர் ராமன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்ற போது இராணுவ வீரர் இளம் பெண்ணின் உறவினர்களை மிரட்டியதாக கூறி காவல் நிலையம் முன்பே இரு தரப்பினரின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இரு தரப்பை சேர்ந்த காசி, மணிமேகலை, ரகு, திலகவதி, சசி, ஜெயபாண்டி, ராமுத்தாய், கார்த்திக், பாண்டியம்மாள், பிரேம், கதிரேசன், சங்கர், பிரபாகரன், கூழ்ச்சாமி, திபாராணி உள்ளிட்ட 20 பேர் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்கா பாஸ் - கஞ்சா விற்பனை செய்ய சிறுவன் கடத்தலா? - மதுரையில் 10 வயது மகனை கண்டுபிடித்து தர தாய் கோரிக்கை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Suruli falls: பருவ மழை அதிகரிப்பால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)