மேலும் அறிய
Advertisement
கஞ்சா விற்பனை செய்ய சிறுவன் கடத்தலா? - மதுரையில் 10 வயது மகனை கண்டுபிடித்து தர தாய் கோரிக்கை
வீட்டில் இருந்து காணாமல் போன தனது 10 வயது மகனை கண்டுபிடித்து தரக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழரான தாயார் கோரிக்கை மனு.
கஞ்சா விற்பனை செய்ய வைப்பதற்காக தனது மகனை கடத்தியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது எனவும், காவல்துறையினர் புகார் வாங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மகனை காணவில்லை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தர்மசாணம்பட்டி பகுதியை சேர்ந்த இலங்கை தமிழர் பிரியா. இவர் கணவனை பிரிந்து தற்போது திருப்பூரில் வசித்துவருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு சில நாட்களுக்கு முன்பாக கஞ்சா விற்கக் கூறி, சிலர் கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்ற நிலையில் பாதுகாப்பு கருதி, தன்னுடன் தங்கவைத்து விடுதியில் சேர்ந்து படித்துவருகிறார். இந்நிலையில் பிரியாவின் இளைய மகனான 10 வயதுடைய லோஹித் பிரியாவின் பெரியப்பாவுடன் மதுரையில் வசித்துவருகிறார். இதனிடையே பிரியாவின் மகனான லோஹித் கடந்த 23ம் தேதியன்று தாத்தா வீட்டில் இருந்தபோது, அதிகாலை இருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து தனது மகனை காணவில்லை என கூறி, சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறிப்படுகிறது. 4 நாட்கள் ஆகியும் மகன் கிடைக்காதததால், ’தனது மகனை கண்டுபிடித்து தரக் கோரி’ மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தார்.
காவல்துறை மிரட்டல்
தனது 10 வயது மகனை கஞ்சா விற்க வைப்பதற்காக சிலர் கடத்தியிருக்கலாம் என்ற, அச்சம் இருப்பதாகவும், தனது மகன் காணாமல் போனது குறித்த புகாரை கீழவளவு காவல்துறையினர் வாங்க மறுப்பதால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தாயார் பிரியா குற்றம்சாட்டினார். ஏற்கனவே மூத்த மகனை கஞ்சா விற்க தூண்டியபோது மறுத்த நிலையில் தனது பெரியப்பாவின் உறவினர்கள் தனது மூத்த மகனை கத்தியால் குத்தி சிகிச்சை பெற்று மீண்டுவந்த நிலையில், தற்போது இளைய மகனும் காணாமல் போனது அச்சமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிரியா தனது பெரியப்பா மீதான போக்சோ வழக்கில் சாட்சியாக இருக்க, ”பிரியா என்ற பெயருக்கு பதிலாக மலர்ஜோதி என்ற பெயரில் வழக்கில் ஆஜராக வேண்டும் என கீழவளவு காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டுவதாகவும் குற்றசம்சாட்டினர். மேலும் தனது பெரியப்பாவின் உறவினர்களான பாண்டிதேவி மற்றும் முருகன் உள்ளிட்டவர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தாயார் பிரியா குற்றச்சாட்டியுள்ளார். தொடர்ச்சியாக தனது உறவினர்கள் மூலமாக செல்போனில் மிரட்டல் அழைப்பு வருவதாகவும் தனது மகனை கடத்தி வைத்திருப்பதாக கூறி மிரட்டுவதாகும் தெரிவித்தார்.
மதுரையில் காணாமல் போன தனது 10 வயது மகனை கண்டுபிடித்து தர கோரி இலங்கைத் தமிழரான பெண் ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "பஸ் ஏற வந்தாலே தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion