Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock market today: இந்திய பங்குச்சந்தை இன்று மிகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 712.45 அல்லது 0.92% புள்ளிகள் உயர்ந்து 78,053.52 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 183.45 அல்லது 0.78% புள்ளிகள் உயர்ந்து 23,721.30 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
தொழில்நுட்ப துறை மற்றும் வங்கி பங்குகள் காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
ரியல் எட்ஸ்டேட் துறையை தவிர மற்ற அனைந்த்து துறைகளும் லாபத்துடன் வர்த்தகமாகின. ஸ்மால்கேப் , மிட்கேப் நிறுவனங்கள் பங்குகள் சிறப்பான செயல்பட்டன. மாலை 3.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 769 புள்ளிகள் அதிகரித்தது. சென்செக்ஸ் 78 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டெக் மஹிந்திரா, லார்சன், விப்ரோ, எஸ்.பி.ஐ., பிரிட்டானியா, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், சன் பார்மா, அப்பல்லோ மருத்துவமனை, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடாக் மஹிந்திரா,டிவிஸ் லேப்ஸ், டாக்டர், ரெட்டி லேப்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
பி.பி.சி.எல்., ஈச்சர் மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், நெஸ்லே, மாருதி சுசூகி,டாடா மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், சிப்ளா, எம்& எம் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
ஜூன் 24-ல் இருந்து சந்தையில் சில நிறுவனங்கள் ஐ.பி.ஓ. அறிவிக்க உள்ளன. 11 நிறுவனங்கள் மொத்தமாக 10 பப்ளிக் இஷ்யூஸ் ரூ,1,991 கோடி மதிப்பில் ஐ.பி.ஓ. லிஸ்ட் ஆக இருக்கிறது.
Mason Infratech
ரியல் எஸ்கேட் நிறுவனம் இன்றுமுதல் வரும் ஜூன் 26 வரை ரூ.30.46 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ. சப்ஸ்க்ரிபசன் வெளியிட உள்ளது. இதன் ஒரு பங்கின் விலை ரூ.62-62 ஆக உள்ளது.
Visaman Global Sales
ஸ்டீல் பைப், HR காய்ல்ஸ் விற்பனை செய்யும் நிறுவாந்த்தில் ஐ.பி.ஓ. வெளியீடு வரும் ஜூன் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.43 ஆக் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
EE Development Engineers and Akme Fintrade India ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜூன் 26-ம் தேதி அவர்களின் பங்குகளை லிஸ்ட் செய்ய இருக்கிறது.
DDE நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீத ப்ரீயமித்தில் வர்த்தகமானது. Akme FIntrade நிறுவனம் 38 சதவீதம் ப்ரீயமத்தில் இருக்கிறது. SME சிறு குறு நிறுவனங்கள் பிரிவில் இன்னும் சில நிறுவனங்கள் லிஸ்ட் ஆக இருக்கிறது. GP Eco Solutions India இன்று லிஸ்ட் ஆக இருக்கிறது. Falcon Technoprojects India, Durlax Top Surface, and GEM Enviro Management ஆகிய நிறுவனங்கள் வரும் 26-ம் தேதி லிஸ்ட் ஆக உள்ளது.