மேலும் அறிய
Madurai ; உசிலம்பட்டியில் சோகம்: சாலை விபத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு கண்ணீர் அஞ்சலி!
உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இராணுவ வீரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.,

ராணுவ வீரர் உடல்
Source : whatsapp
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரருக்கு இராணுவ இறுதி மரியாதை செய்யப்பட்டு சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வபாண்டியன் என்ற இராணுவ வீரர்., விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று 11.12.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தனது மைத்துனர் அருண்குமார் உடன் மதுரை சென்றுவிட்டு திரும்பும் போது உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவருமே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.,
விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் உடற்கூய்வு செய்யப்பட்டது
விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் உடற்கூய்வு செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு மெட்ராஸ் எஞ்சினியரிங் செண்டர் இராணுவ முகாமிலிருந்து இராணுவ அதிகாரி சரவணபெருமாள் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இராணுவ மரியாதை செலுத்திய பின், இராணுவ வீரரின் பூத உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அவரது பெற்றோரிடம் இராணுவ அதிகாரிகள் வழங்கி இறுதி சடங்குகள் மற்றும் இராணுவ மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இராணுவ வீரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















