மேலும் அறிய

திண்டுக்கல் : ரூ.17-க்கு கீழ் வீழ்ந்த விலை.. சிறுமலையில் திராட்சை விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை..

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதியில் விளைவிக்கப்படும் திராட்சை விவசாயம் பாதிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கள், காய்கறிகள் என அதிகளவில் விவசாயம் செயப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கருப்பு திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சிறுமலை அடிவார பகுதியில் திராட்சை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அதன்படி வெள்ளோடு, காந்திகிராமம்,  தொப்பம்பட்டி, அமலிநகர், கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை அடிவாரத்தில் பயிரிடப்படுகிற திராட்சைக்கு எப்போதுமே டிமாண்ட் உள்ளது. குறிப்பாக இங்கு பயிரிடக்கூடிய கருப்பு திராட்சை, கூடுதல் சுவை கொண்டதாக இருக்கும். வருடத்துக்கு 2 முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது.


திண்டுக்கல் : ரூ.17-க்கு கீழ் வீழ்ந்த விலை.. சிறுமலையில் திராட்சை விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை..

6 மாதத்துக்கு ஒருமுறை திராட்சை பழங்களை அறுவடை செய்யலாம். கொடிகளிலேயே அழுகும் அவலம் தற்போது சிறுமலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களில் கொத்துக்கொத்தாக திராட்சை பழங்கள் காய்த்து தொங்குகின்றன. அதனை அறுவடை செய்து, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தற்போது திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் செலவழித்த தொகை கூட கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

திராட்சை விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. உற்பத்தி செலவு கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் திராட்சை பழங்களை பறிக்காமல், கொடிகளிலேயே அழுக விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 2,500 கிலோ மகசூல் பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் இருந்த சிறுமலை அடிவார பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளாக பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீர் உயர்ந்தது. இதனால் திராட்சை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.


திண்டுக்கல் : ரூ.17-க்கு கீழ் வீழ்ந்த விலை.. சிறுமலையில் திராட்சை விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை..

இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக பல ஏக்கர் பரப்பளவில் திராட்சை பயிரிடப்பட்டது. இதுகுறித்து திராட்சை பயிரிட்ட விவசாயிகள்  கூறுகையில், ஒரு ஏக்கருக்கு திராட்சை விளைவிக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் என்றால், ஏக்கருக்கு 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கிலோ ரூ.17-க்கு விற்பனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை வியாபாரிகள், தோட்டத்துக்கே நேரடியாக வந்து பழங்களை கொள்முதல் செய்தனர். ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.80 வரை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டமில்லாமல் திராட்சை ஒரு லாபகரமான பயிராகவே இருந்து வந்தது.


திண்டுக்கல் : ரூ.17-க்கு கீழ் வீழ்ந்த விலை.. சிறுமலையில் திராட்சை விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை..

ஆனால் தற்போது திராட்சை விலை அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. கடந்த ஆண்டில் ஒரு மாதம் மட்டுமே அதிகபட்சமாக ஒரு கிலோ திராட்சை ரூ.40 க்கு விற்பனையானது. அதன்பிறகு ரூ.17 முதல் ரூ.32 வரை விலை ஏற்ற இறக்கத்துடன்    இருந்தது. ஆனால் கடந்த 15 தினங்களாக கிலோ ரூ.17-ஐ தாண்டவே இல்லை. ஒரு கிலோ திராட்சை ரூ.40-க்கு குறையாமல் விற்பனையானால் மட்டுமே நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் தப்பிக்க முடியும். ஆனால் இந்த ஆண்டில் திராட்சை பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே திராட்சை பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். விலை வீழ்ச்சி அடையும்போது, திராட்சையை பதப்படுத்தி வைத்து மீண்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget