மேலும் அறிய
Advertisement
பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு ஆயுள்... விருமனுக்கு அனுமதி... சுத்தியல் கொலை... தென் மாவட்டத்தில் இன்னும் பல!
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1183 இருக்கிறது.
1. மனித உரிமை மற்றும் நுகா்வோா் அமைப்புகள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
2. 2013 ம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கு,
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
3. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் குளத்தில் குளித்த முத்து விக்னேஷ் என்ற சிறுவன் குளத்து மடையில் சிக்கி உயிரிழப்பு. திசையன்விளை போலீசார் விசாரணை.
4. ராமநாதபுரம் முத்துசாமி என்பவர் கொலை சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கானது, ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாஸ் என்ற பாஸ்கரனுக்கு ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் ரூ 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இதே வழக்கில் ஏற்கனவே மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6. நடிகர் கார்த்திக்கின் விருமன் திரைப்படம் கெடுபிடிக்கு பிறகு தேனி மாவட்ட ஆட்சியர் படப்பிடிப்பிற்கு உத்தரவு அளித்துள்ளார்.
7. மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
8. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணியம்பட்டி ஊராட்சி ஒன்றியத் நொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு மாய்ந்தது. இதில் பள்ளிக் கட்டிடம். சுற்றுச்கலர் சேதமடைந்தது.
9. திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு பணம், நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75519-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 11 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74235-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1183 இருக்கிறது. இந்நிலையில் 101 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion