மேலும் அறிய
மதுரையில் 10 மாடியில் பிரமாண்ட டைடல் பார்க் கட்டடம்.. எப்போதி பணிகள் முடியும் தெரியுமா?
கடந்தாண்டு மார்ச் மாதம் பணிகள் துவங்கப்பட்டு, கடந்த மாதம் மழையால் பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துரிதபடுத்து வேகமாக நடைபெற்று வருகிறது

மதுரை டைடல் பார்க் கட்டடம் முன் அமைச்சர்
Source : whatsapp
யாராக இருந்தாலும் ஆக்கபூர்வமான எந்த ஒரு கேள்வியை கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம், தேவையில்லாத அற்பத்தனமான கேள்விகளுக்கு தூக்கத்தில் இருக்கிறவங்க பேசுறதுக்கெல்லாம் நாம பதில் சொல்ல முடியாது - தீய சக்தி திமுக என விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு காட்டமாக பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
மதுரை டைட்டில் பூங்கா கட்டுமான பணி
மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க், பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தால் பொறியாளர்களிடம் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் துரிதமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது...,” திராவிட மாடல் அரசு மதுரைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து கொண்டு வருகிறது. மதுரை டைட்டில் பூங்கா கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
டைடல் பார்க் பணி எப்போது முடியும்
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மார்ச் மாதம் பணிகள் துவங்கப்பட்டு, கடந்த மாதம் மழையால் பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துரிதபடுத்து வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஜூன் ஜூலை மாதத்திற்குள் இந்த டைட்டில் பூங்கா கட்டுமான பணிகள் முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் மதுரைக்கு கொடுத்திருக்க மிகப்பெரிய வளர்ச்சிப் பணி இந்த டைட்டில் பார்க். மதுரையில் இது போன்ற பிரம்மாண்டமான கட்டடம் இல்லை, இதுவே முதல் பிரதான பிரம்மாண்ட கட்டடமாக திகழும்.. திராவிட மடல் அரசு தொடர்ந்து இதுவரையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்காத வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது.
ஈரோட்டில் விஜய் திமுக தீய சக்தி என விமர்சித்தது குறித்த கேள்விக்கு
யாராக இருந்தாலும் ஆக்கபூர்வமான எந்த ஒரு கேள்வியை கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் தேவையில்லாத அற்பத்தனமான கேள்விகளுக்கு, தூக்கத்தில் இருக்கிறவங்க பேசுறதுக்கெல்லாம் நாம பதில் சொல்ல முடியாது எனக்கு பதிலளித்தார்.
மொத்தம் 10 தலங்கள் அப்ப நெனச்சு பாருங்க எப்படி இருக்கும்
ஆய்விற்குப் பின்பு Exact அ பில்டிங் அமைச்சர் கையில் வைத்திருந்த டைட்டில் பார்க் மாதிரி புகைப்படம் வைத்திருந்தார். இதே லுக்குல இந்த பில்டிங் வருமா என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்த டிஆர்பி ராஜா. இது என்ன கேள்வி என்று சிரித்து இதே போல தான் வரும் தற்போது இரண்டு மாடியில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 10 தலங்கள் அப்ப நெனச்சு பாருங்க எப்படி இருக்கும் என்றார் இதனால் சிரிப்பலை எழுந்தது. ஆய்வின்போது வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















